ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தணிந்து தற்போது அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருந்தாலும், ஒரு புதிய தொழில்நுட்ப சிக்கல் உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி, ஈரான் தனது கடற்பகுதியான ஹோமுஸ் ஜலசந்தியில் ஏராளமான கடல் கண்ணிவெடிகளை (Sea Mines) அவசர அவசரமாகப் புதைத்தது.

ஆனால் கொடுமை என்னவென்றால், அந்த கண்ணிவெடிகளை எங்கே வைத்தோம் என்பதையே தற்போது ஈரான் மறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல் நீரோட்டத்தினால் சில கண்ணிவெடிகள் இடம் மாறியுள்ளதால், அவற்றை மீட்க முடியாமல் ஈரான் திணறி வருகிறது.

உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகத்தான் நடக்கிறது. குறிப்பாக இந்தியாவின் 80 சதவீத எரிசக்தித் தேவை இந்த கடல் பாதையைத்தான் நம்பியுள்ளது.

இந்த பாதையை உடனடியாகத் திறக்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், கண்ணிவெடி பயத்தால் கப்பல்கள் வரத் தயங்குகின்றன.

இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தற்போது கப்பல்களுக்கு மாற்றுப் பாதையை அறிவித்திருந்தாலும், முக்கிய கடல் வழிப்பாதை சீராகும் வரை சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் இந்த மர்மம் நீடிக்கவே செய்யும்.