அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலிபா, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இந்த இக்கட்டான சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாக்க இஸ்ரேல் தனது புகழ்பெற்ற ‘அயர்ன் டோம்’ ஏவுகணைத் தடுப்பு பேட்டரிகளையும், அதை இயக்குவதற்கான வீரர்களையும் அனுப்பி உதவியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த விவகாரத்தில் உக்ரைன் வீரர்கள் உதவியதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், மைக் ஹக்கபீயின் இந்த அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆபிரகாம் ஒப்பந்தத்தின்’ பலனாகவே இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே இத்தகைய பாதுகாப்பு உறவு வலுப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீது நீண்டகாலமாகச் சந்தேகம் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடன் இணைந்து தனது வான் பாதுகாப்பை உறுதி செய்திருப்பது மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.
