நடிகர் ரோபோ ஷங்கர் சென்ற சில மாதங்களாக உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறி உள்ளார். அவர் ஒல்லியானதற்கு நோய் தான் காரணம் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்திய ரோபோ ஷங்கர் தனக்கு மஞ்சக்காமாலை நோய் வந்தது தான் உடல் எடை குறைய காரணம் என்று தெரிவித்தார். இறப்பின் விளிம்புக்கே சென்று திரும்பி வந்து விட்டேன் என்று ரோபோ ஷங்கர் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் அவரது மகள் இந்திரஜா அளித்திருக்கும் பேட்டியில் “அப்பா ரோபோ ஷங்கருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்” என கூறி இருக்கிறார். இப்போது இந்திரஜாவுக்கு 21 வயதாகும் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.