ஈரான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், அமெரிக்காவிடம் கணக்கில் அடங்காத ஆயுதங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி எங்களால நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து போரிட முடியும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளதால், தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
