நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்தனர்.

அவர்கள் சமைத்து வைத்திருந்த இறைச்சியை உண்பதற்காக திடீரென சிறுத்தை வந்தது. அந்த சிறுத்தை சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் தொழிலாளர்களின் சப்தம் கேட்டதால் சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் பொதுமக்களும், தொழிலாளர்களும் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை உலா வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.