நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் பயணிக்க கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சாலையில் சென்றனர்.

அந்த பேரணி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக பூங்கா சாலையில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் உமா, எம்.பி ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பாதுகாப்பு உறுதி மொழியும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி நித்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.