குன்னூர் மற்றும் ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில்கள் கனமழை காரணமாக நவம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குன்னூரில் இருந்து தினமும் காலை 7.45, பிற்பகல் 12.35 , மாலை 4 மணிக்கு ஊட்டி செல்லும் ரயில்களும், மறு மார்க்கமாக ஊட்டியில் இருந்து காலை 9.15, பிற்பகல் 12.15 மற்றும் மாலை 5.30 மணிக்கு குன்னூர் செல்லும் ரயில்கள் நவம்பர் 13ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் பயணச்சீட்டின் கட்டணத்தொகை முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.