பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து அதில் சிலருக்கு ரூ 1000 கிடைக்கப் பெற்று வரும் நிலையில், மீதமுள்ளோர் பலர் மீண்டும் ரூ 1000 வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அவை அனைத்தும்  தீவிரமாக பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும்  அவர்களுக்கான உரிமைத் தொகை கிடைக்கும் எனவும்,  தகுதியுள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கணக்குகளையும் முறையாகக் கணக்கிடும் வரை அரசு ஓயாது என்று உறுதிபடக் கூறிய ஸ்டாலின்,  மேலும், டிசம்பர் முதல் புதிய பயனாளிகளுக்கு ரூ1000  சென்றடைவதற்கான அனைத்து முன்முயற்சியையும் அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.