பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த திருமண அழைப்பிதழ், அவரது வங்கிக் கணக்கையே காலி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்கள் அனுப்பிய அந்தப் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு ‘APK’ கோப்பு (File) இணைக்கப்பட்டிருந்தது. அதை உண்மையான அழைப்பிதழ் என நம்பி அந்தத் தொழிலதிபர் பதிவிறக்கம் செய்துள்ளார்.

அந்தச் செயலியை இன்ஸ்டால் செய்தவுடன், அவரது ஸ்மார்ட்போனில் இருந்த ரகசியத் தரவுகள் மற்றும் வங்கித் தகவல்களை அந்த மோசடி கும்பல் திருடியுள்ளது.

இதன் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து அடுத்த சில நிமிடங்களிலேயே சுமார் 5 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்க் அல்லது ஃபைல்களைத் திறக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இந்தச் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.