தற்போது அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஆவணமாக மாறியுள்ளது. பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது முதல் முதியோர் உதவித்தொகை பெறுவது வரை அனைத்திற்கும் இது தேவைப்படுகிறது.

இதனால் ஒருவரின் கைரேகை மற்றும் சுயவிவரங்கள் அடங்கிய இந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  ஆதார் லாக்’ எனும் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினர் யாரும் உங்கள் ஆதாரைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் ஆதாரை லாக் செய்ய, முதலில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘ஆதார் லாக் / அன்லாக்’ என்ற பிரிவிற்குச் செல்ல வேண்டும். அங்கு லாக்’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் ஆதார் எண், முழுப் பெயர் மற்றும் பின்கோடு ஆகியவற்றை உள்ளிட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் ஆதாரைப் பாதுகாப்பாக லாக் செய்யலாம்.

இந்நிலையில் லாக் செய்யப்பட்ட நிலையில் பயோமெட்ரிக்ஸ் மற்றும் ஓடிபி வேலை செய்யாது என்பதால், அந்த நேரத்தில் தற்காலிகமாக 16 இலக்க விர்சுவல் ஐடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படும்போது இதே முறையில் ஆதாரை மீண்டும் அன்லாக் செய்து கொள்ளவும் முடியும்.