அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் “புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம்” மூலம் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறார். இந்தப் பயணத்தின் போது பேசிய அவர், தனது அரசியல் பயணத்தை எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து தொடங்கி, உழைப்பு, சேவை, விசுவாசம் ஆகியவற்றை மட்டுமே அடையாளமாகக் கொண்டு முன்னேறியதாகக் குறிப்பிட்டார்.
இந்த இடத்தில் விஜயை விமர்சித்தவர் “சிலரை போன்று பல படங்களில் நடித்து அதன் மூலம் பணம் சம்பாதித்து ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் போல அல்ல. இளம் வயதிலேயே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது ஈர்க்கப்பட்டு, 51 ஆண்டுகளாக அதிமுகவிற்காக அயராது உழைத்து, இணைச் செயலாளர், ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, மாநிலப் பொறுப்பு என படிப்படியாக உயர்ந்து, மக்களின் ஆதரவால் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் பதவி வகித்ததாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
இந்தப் பயணம், அவரது கடின உழைப்பு மற்றும் கட்சி மீதான அசைக்க முடியாத விசுவாசத்தின் வெளிப்பாடு என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், அரசியலில் உண்மையான அடையாளம் உழைப்பால் மட்டுமே வரும் என்பதை எடுத்துரைத்த எடப்பாடி, மறைமுகமாக புதிய அரசியல் கட்சிகளை விமர்சித்தார். திரைப்படத் துறையில் ஒருவர் ஹீரோவாக உயர பல ஆண்டுகள், பல படங்களில் உழைக்க வேண்டியிருப்பது போல, அரசியலில் வெற்றி பெறவும் நீண்டகால அர்ப்பணிப்பும் உழைப்பும் தேவை என அவர் கூறினார்.
மற்றவர்களைப் போல, புகழின் அடிப்படையில் அரசியலில் நுழையாமல், மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், அதிமுகவின் பாரம்பரியமும் மக்கள் செல்வாக்கும் தனது பலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 105 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற எழுச்சி மாநாடுகள், அதிமுகவின் வலுவான அடித்தளத்தை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும், 2026 தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் எனவும் எடப்பாடி உறுதியளித்தார். இந்தப் பயணம், அதிமுகவின் அரசியல் ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நான் கிராமத்தில் பிறந்தவன். உழைப்பு, சேவை, விசுவாசம்- இது தான் என்னுடைய அடையாளம்.
திரைப்படத்தில் நடித்து, வருமானம் பெற்று, ஓய்வு பெறும் காலத்தில் அரசியலுக்கு வரும் நிலையில் இல்லை.
இளமைக் காலத்தில் இருந்து புரட்சித் தலைவரால் ஈர்க்கப்பட்டு, @AIADMKOfficial-க்காக பாடுபட்டு,… pic.twitter.com/sC6qJegdTA
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) August 21, 2025
