2023 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் NZ Vs ENG அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் அந்த போட்டியை காண 40 ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருந்தும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளன.