சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “உலகின் மிகச்சிறிய சிங்கம்” என்று வர்ணிக்கப்படும் ஒரு விசித்திரமான விலங்கை இளைஞர் ஒருவர் தனது கைகளில் ஏந்தியிருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம் போன்ற தோற்றமும், அதன் கம்பீரமான கர்ஜனையும் கொண்ட அந்த சிறிய உயிரினத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “நிஜமாகவே இது சிங்கம்தானா?” அல்லது ஏதேனும் நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் உண்மையில், இது நிஜமான சிங்கம் அல்ல; இது ஒரு வகை நாய்க்குட்டி அல்லது உருவ ஒற்றுமை கொண்ட விலங்குக்கு சிங்கத்தைப் போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், அந்த வீடியோவில் உள்ள உயிரினம் எழுப்பும் சத்தம் மற்றும் அதன் அசைவுகள் பார்ப்பதற்கு அச்சு அசலாக சிங்கக் குட்டியைப் போல இருந்தது.
