உலக அமைதி குறியீடு (Global Peace Index – GPI) 2025 ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 23 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் – இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலைவிகிதம், பயங்கரவாத தாக்கங்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து, 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
2008 முதல் தொடர்ந்து முதலிடத்தை பிடித்த ஐஸ்லாந்து இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளதை GPI அறிவித்துள்ளது. அதன் பின்னர் அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முதலாவது 10 இடங்களை பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்தியா 115வது இடத்தில் உள்ளது, அதைவிட மோசமாக பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, ரஷ்யா 163வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இது உலக அமைதி நிலவரம் குறித்து முக்கியமான பார்வையை அளிக்கிறது. பொதுவாகவும், ஐரோப்பிய நாடுகளே அதிகபட்ச பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் இந்த தரவரிசை மூலம் தெரிய வருகிறது.
