நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய பலத்த அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஹைதராபாத் அணியின் கேப்டனும் உலகப் புகழ்பெற்ற பந்துவீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரைப் பிரித்து மேய்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார்.
கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்து தொடர்ந்து 3 அசுரத்தனமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மைதானத்தையே அதிர வைத்துள்ளார்.
அந்த ஓவரில் 1, 4, வைடு, 6, 6, 6, 1 என ஒட்டுமொத்தமாக ரன்களை வாரிக்குவித்து, ராஜஸ்தான் அணி வெறும் 3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 45 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்து மாஸ் காட்டியுள்ளார்.
மிகக் குறைந்த வயதில் ஒரு வாழ்வா சாவா நாக்-அவுட் போட்டியில், உலகின் டாப் பௌலரை இப்படிப் பதறவைத்த வைபவ் சூர்யவன்ஷியின் இந்த வெறித்தனமான பேட்டிங் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
