ஐபிஎல் 2026 தொடரின் நாக்-அவுட் சுற்றான ஹை-வோல்டேஜ் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் அசுரன் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வாயடைக்க வைக்கும் உலக மகா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்!

டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் இந்த ‘லிட்டில் டைனமைட்’, ஆரம்பம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார்.

போட்டியின் 4-வது ஓவரை வீசிய சாகிப் உசேன் பந்துவீச்சில், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கடந்த 2012-ல் படைத்திருந்த 59 சிக்ஸர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை அசால்ட்டாக முறியடித்தார். சூர்யவன்ஷி வெறும் 16 பந்துகளில் அதிவேக அரைசதம் கடந்து, மொத்தமாக 12 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இந்த ஒரே சீசனில் 65 சிக்ஸர்களுடன் புதிய உலக சிகரத்தை எட்டியுள்ளார்!

“>

 

கம்மின்ஸின் அத்தனை வியூகங்களையும், ஃபீல்டிங் மாற்றங்களையும் தவிடுபொடியாக்கிய அவர், வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து சதத்தை நூலிழப்பில் தவறவிட்டு அவுட்டானாலும், அவரது இந்த அசுரத்தனமான பேட்டிங் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் ஒரு தங்கப் பக்கமாக எழுதப்பட்டுள்ளது!