மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது. கடந்த 47 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் சூடியது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய ‘விமன் இன் ப்ளூ’ அணி, வெற்றிக் கோப்பையை உற்சாகத்துடன் பெற்றது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கோப்பையை ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து பெற்றுக்கொண்டபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>

வெற்றிக் கோப்பையை ஜெய் ஷாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு வந்த ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை நிமித்தமாக ஐசிசி தலைவரான ஜெய் ஷாவின் கால்களைத் தொட்டு வணங்கச் சென்றார். ஆனால், உடனடியாக அதைத் தடுத்து நிறுத்திய ஜெய் ஷா, ஒரு கணம் கூட தாமதிக்காமல், வெற்றி வீரரான ஹர்மன்பிரீத் கௌருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர் காலில் விழுந்து வணங்கினார்.

பின், கோப்பையை அவரிடம் வழங்கிவிட்டு, அந்தத் தருணத்தை அணி முழுவதுமாக கொண்டாடட்டும் என்று கூறிவிட்டு மேடையில் இருந்து உடனடியாக விலகிக் கொண்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஜெய் ஷாவுக்கு இடையே நடந்த இந்த மரியாதை பரிமாற்றத் தருணம் பல கோடி இந்திய ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.