2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
உள்ளூர் மண்ணில் நடந்த இந்தப் போட்டியின் போது, மைதானத்தில் அமர்ந்து விளையாட்டைக் கண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்ட தருணம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக இடம்பிடித்தது.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இந்திய வீராங்கனைகள் வெற்றியைக் கொண்டாடியபோது, கேமராக்கள் விஐபிகளை நோக்கித் திரும்பியபோது, கண்களில் கண்ணீருடன் ரோஹித் காணப்பட்டார்.
View this post on Instagram
“>
கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய வேதனை ரோஹித் சர்மாவுக்கு இன்னும் ஆறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றது அவருக்கு ஒரு சிறப்புத் தருணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில், தீப்தி ஷர்மா 58 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகியாக ஜொலித்தார். தீப்தி சர்மா கடைசி விக்கெட்டை வீழ்த்தியதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரைச் சூழ்ந்து வெற்றியைக் கொண்டாடினர். அப்போது மைதானத்தில் வான வேடிக்கைகள் வெடித்தன; இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித் சர்மா, தனது அணியின் தோல்வியின் வலியிலிருந்து மீண்டு பெண்கள் அணி வரலாற்று வெற்றியை ஈட்டியதைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்கினார்.
