ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் (வயது 29), தனது பந்துவீச்சில் அதி தீவிர ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார்.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த இந்தப் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து 299 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் விளையாடிய போது, க்ராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோர் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்து வீசியும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. விக்கெட் கிடைக்காத இந்த சோர்வும், விரக்தியும் ரேணுகாவின் ஆக்ரோஷத்தில் வெளிப்பட்டது.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) November 2, 2025
“>
போட்டியின் 10வது ஓவரில் முதல் பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் அடிக்க, பந்து நேராக ரேணுகா சிங் தாக்கூரை நோக்கி வந்தது. பந்தை எடுத்த ரேணுகா, அதிவேகமாகப் பேட்ஸ்மேன் மீது எறிந்தார். பேட்ஸ்மேன் பிரிட்ஸ் உடனடியாக விலகியதால் பந்து அவரது உடலில் படாமல் ஸ்டம்பில் தாக்கியது.
ரேணுகாவின் இந்த ஆக்ரோஷமான செயல், கள நடுவரான ஜாக்குலின் வில்லியம்ஸிற்கு சற்றும் பிடிக்கவில்லை. அவர் உடனடியாக ரேணுகாவை அழைத்து, அவருக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்தார். நடுவர் ரேணுகாவைக் கண்டித்தபோது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விரைந்து வந்து தன் வீராங்கனைக்கு ஆதரவாகப் பேசிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
