இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தன்னுடைய யூசர்களுக்கு 100 கோடி பரிசை பகிர்ந்தழிப்பேன் என்று ஆஸ்ட்ரோ டாக் நிறுவனத்தின் தலைவர் புனித் குப்தா அறிவித்துள்ளார். ஆஸ்ட்ரோ டாக் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் சென்று யார் வேண்டுமானாலும் தங்களுடைய பிரச்சனைகளை சொல்லி ஜோதிடர்களிடம் தீர்வு கேட்கலாம். தற்பொழுது ஏராளமான யூசர்களோடு இந்த வலைதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புனித் குப்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், கடந்த முறையில் இந்தியா 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்றது. அந்த சமயத்தில் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணங்களில் அந்த நாளும் ஒன்று. அப்போது நடந்த அந்த போட்டிக்கு முந்தைய நாள் நான் தூங்கவே இல்லை. போட்டியில் என்ன நடக்கும் என்பதை பற்றி இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம் .
ஆனால் இந்தியா உலகக்கோப்பை கைப்பற்றியதும் எல்லாமே மாறிப்போனது. அந்த தருணம் கொடுத்த புல்லரிப்பும் மிக நீண்ட நேரத்திற்கு இருந்தது. என்னுடைய நண்பர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டேன் .இந்த நிலையில் நேற்று இரவு எனக்கு ஒரே யோசனை தான் இருந்தது. இந்த உலக கோப்பைக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். கடந்த முறை எனக்கு நண்பர்கள் இருந்தார்கள் அவர்களோடு நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை எனது ஆஸ்ட்ரோ டாக் யூசர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
எனவே அவர்களோடு மகிழ்ச்சியை பகிர முடிவு செய்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நூறு கோடியை என்னுடைய ஆஸ்ட்ரோ டாக் யூசர்களின் வாலட்டுகளுக்கு பகிர்ந்தழிக்குமாறு கூறியுள்ளேன். இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் இந்தியாவை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
