வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதையும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.