தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கி பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. சமீபத்தில் இவருடைய கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை இழந்த நிலையில் இருந்து வரும் மீனா தற்போது தோழிகள் மற்றும் அவரின் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மீனா திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்ததாகவும் தன் காதலை அவரிடம் வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ள நினைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத ரித்திக் ரோஷன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் மீனா தனது காதல் ஆசையை நிறுத்திக் ரோஷனிடம் சொல்லாமல் மனதிற்குள் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.