டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அபி சரவணன் ஹீரோவாகவும் புரட்சித் தலைவராகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் பெயரை விஜய் விஸ்வா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் ஓர் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற படப்பிடிப்பின் போது இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி உதைப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது பைக்கில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் அபி சரவணனின் வலது கை முறிந்து உள்ளது. பின்னர் வழியால் துடித்தவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.