கேரளாவில் உரிய சிகிச்சை இல்லாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் வெந்நீர் வாளியில் விழுந்து காயமடைந்த மூன்று வயது சிறுவன் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் நபர், மற்றும் சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உள்ளூர் மருத்துவமனையில் சொல்லியும் சொல்லியும் அதை ஏற்காத தந்தை அஸ்தாப் மாற்றுமுறை சிகிச்சை அளிக்கும் ஜார்ஜ்(68) என்பவரிடம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
