டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை நலம் விசாரிப்பதற்காக ஒன்று கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நுரையீரலில் தொற்று காரணமாக டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதேஷ்யாம் என்ற 75 வயது முதியவரின் கடைசி காலத்தை அவரோடு செலவிட, ராஜஸ்தான், பெங்களூரு, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவரது குடும்பத்தினர் டெல்லி வந்திருந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் ராதேஷ்யாமின் மனைவி, மகன், மருமகள், பேத்திகள் மற்றும் உறவினர்கள் என குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பலரும் திறமையானவர்களாகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுமாகவும் இருந்த நிலையில், அவர்களது மறைவு அனைவரையும் கண்ணீர் மல்க வைத்துள்ளது.
இதனால் குடும்ப உறவுகளின் பாசப் பிணைப்பிற்காக ஒன்று கூடிய அந்த உறவுகள், விதிவசத்தால் இப்படி ஒரு கோர மரணத்தைத் தழுவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராதேஷ்யாமிடம், தனது குடும்பத்தினர் அனைவரும் தீ விபத்தில் உயிரிழந்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படாமல் இருப்பது அவரது நிலையை எண்ணி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
