ஆந்திர மாநிலம் பெல்லாரி கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்த நூர் அகமது, தனது காதல் மனைவி அப்ரின் பானுவைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது.

மேலும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மே 21-ம் தேதி மனைவியை வெளியே அழைத்துச் சென்ற நூர் அகமது, வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்துள்ளார்.

இதனால் கொலை செய்த பிறகு மனைவியின் உடலைத் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடத்தினி பகுதி முள் புதரில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அப்ரின் பானுவைக் காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த காவல்துறை, அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் அடிப்படையில் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். விசாரணையில் நூர் அகமது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.