சமூக வலைதளங்களில் ‘தி ரியல் டார்சன்’ என்று அழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக் ஹோல்ஸ்டன் என்பவர் செய்த அதிர்ச்சியூட்டும் சாகச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருக்கும் மைக், உயிருள்ள ஒரு சிறிய பாம்பை தனது மூக்கின் துவாரத்தின் வழியாக உள்ளே செலுத்தி, அடுத்த சில நொடிகளில் அதை வாய் வழியாக வெளியே எடுத்து அனைவரையும் உறைய வைத்துள்ளார்.

மேலும் ஆபத்தான விலங்குகளுடன் பழகும் ஆர்வம் கொண்ட இவர், விலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், இத்தகைய உயிருக்கு ஆபத்தான செயலைச் செய்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளதுடன், பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

“>

இவரது இந்த செயல் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாம்பை மூக்கின் வழியாக இழுக்கும்போது அது தொண்டைக்குள் சிக்கியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று பல நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சாகசத்திற்குப் பிறகு மைக் ஹோல்ஸ்டன் கேமராவைப் பார்த்து சிரித்தபடி நின்றாலும், பின்னணியில் இருந்தவர்கள் பயத்தில் அலறுவது வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இத்தகைய ஆபத்தான செயல்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், யாரும் இதை முயற்சிக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.