சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோதமான வீடியோவில், பாம்பு ஒன்று தன்னைத்தானே விழுங்கி தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டிருப்போம், ஆனால் ஒரு பாம்பு தனது சொந்த வாலை விழுங்கி உயிர்விட முயன்றது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘ஸ்பெக்ல்ட் கிங்சினேக்’ வகையைச் சேர்ந்த இந்த பாம்பு, தனது உடலின் பாதி பகுதியை ஏற்கனவே விழுங்கியிருந்த நிலையில், அங்கு வந்த நபர் ஒருவர் சாதுர்யமாகச் செயல்பட்டு அந்த பாம்பை தடுத்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

“>

இந்நிலையில் அந்த நபர் தலையிட்டவுடன், பாம்பு தான் விழுங்கியிருந்த தனது வால் பகுதியை மெல்ல வெளியே உமிழ்ந்தது. சுமார் 39 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப் ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியது.

நச்சுத்தன்மையற்ற இந்த வகை பாம்புகள் பொதுவாக எலிகள் மற்றும் பல்லிகளை உணவாகக் கொள்ளும், சில சமயங்களில் மற்ற பாம்புகளையும் வேட்டையாடும் குணம் கொண்டவை. இந்த விசித்திரமான நிகழ்வைக் கண்ட நெட்டிசன்கள், இது பழங்கால அடையாளமான ‘ஓரோபோரஸ்’ போன்றே இருப்பதாகக் கூறி தங்களது வியப்பைத் தெரிவித்து வருகின்றனர்.