2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சைபர் சிட்டியில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோலாகலமாகத் தொடங்கிய இந்தப் புத்தாண்டு விழாவில், இசை மற்றும் நடனத்துடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். இருப்பினும், கொண்டாட்டம் முடிந்த பிறகு வெளியான வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளன.
மேலும் மதுபோதையில் தங்களை மறந்த பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சாலையோர நடைபாதைகளிலும், பொது இடங்களிலும் மயங்கிக் கிடக்கும் காட்சிகள் ‘புத்தாண்டு பார்ட்டியின் பக்கவிளைவுகள்’ என்ற பெயரில் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
“>
இந்த வைரல் வீடியோக்களில், நள்ளிரவில் ‘ஹேப்பி நியூ இயர்’ எனத் திரையில் தோன்றியபோது மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவதும், அடுத்த சில மணிநேரங்களில் அதே மக்கள் சுயநினைவின்றி வீதிகளில் சரிந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது.
சில இளைஞர்களை அவர்களது நண்பர்கள் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பொதுமக்களின் இந்த அநாகரிகமான மற்றும் கட்டுப்பாடற்ற போக்கைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒருபுறம் கொண்டாட்டங்கள் உற்சாகமாகத் தொடங்கினாலும், மறுபுறம் போதையால் ஏற்பட்ட இத்தகைய அவலமான காட்சிகள் சைபர் சிட்டியின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு கறையாக அமைந்துவிட்டன.
