உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒரு நபர் உயிருடன் உள்ள இரண்டு இந்திய நாகப்பாம்புகளை வைக்கோல் அடுக்கில் எரிக்கின்ற அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகியதும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்திய நாகப்பாம்பு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் அட்டவணை 1-இல் பாதுகாக்கப்பட்ட வகையாக இருப்பதால், இது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக PETA India-வின் புகாரைத் தொடர்ந்து, ஹமிர்பூர் வனப்பிரிவு மற்றும் சித்ரகூட் தாம் வலயம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. IFS அதிகாரி அனில் ஸ்ரீவாஸ்தவா தலைமையில், வனத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
“>
பிரிவு 9, 39 மற்றும் 51 ஆகியவையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, ஜாமீன் கிடைக்காத குற்றமாகும். குற்றவாளிக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தபட்சமாக ₹25,000 அபராதமும் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து PETA India அமைப்பின் தலைமை பதில் ஒருங்கிணைப்பாளர் சலோனி சகாரியா, “நாகங்கள் எரியக்கூடிய கொடூர வலியை அனுபவித்துள்ளன; இது தேவையற்ற, மனிதாபிமானம் அற்ற செயல். இவ்வாறான சூழலில், பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், விலங்குகளை கொடூரமாக கையாளக்கூடாது” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.
