டெல்லி இந்திராபுரம் பகுதியில் அமைந்துள்ள கௌர் கிரீன் சொசைட்டிக்கு அருகே, மாற்றுத் திறனாளி ஒருவர் தனது ஸ்கூட்டரை ரிவர்ஸ் செய்யும்போது 15 அடி ஆழமுள்ள திறந்த வடிகாலில் தவறி விழுந்துள்ளார். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காணொளியில், ஸ்கூட்டரின் பின் சக்கரம் வடிகாலுக்குள் விழுந்துவிட, அந்த நபர் கூடவே உள்ளே இழுக்கப்படுகிறார். சம்பவம் நடந்ததும் அருகில் இருந்த மக்கள் மற்றும் கடைக்காரர்கள் மர ஏணியின் உதவியுடன் அவரை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் சந்தோஷ் யாதவ் எனும் நபர் சிறுவர்களுக்காக பர்கர் வாங்க சென்றிருந்த போது தான் இது நடந்ததாகவும், அவரது பின்னால் சிறு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த வடிகால் கடந்த மாதம் நகராட்சி துறையால் சுத்தம் செய்யப்பட்டது ஆனால் பாதுகாப்பு ரேம்புகள் வைக்கப்படாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன என்றும், கடந்த மாதம் ஒரு குழந்தையும் விழுந்ததாக கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
From Ghaziabad, Uttar Pradesh.
A young man on scooty fell into an open drain. The kids on the spot raised alert and the victim driver was rescued by onlookers using a ladder. pic.twitter.com/FP4sBk7xcP
— Piyush Rai (@Benarasiyaa) August 28, 2025
“>
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதுடன், மக்கள் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். “வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்காத நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
