உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பெண் யூடியூபர் சரிதா சிங் என்பவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், அவர் ஆடிய ஒரு பொய் நாடகம் என காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கடந்த மே 4-ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட சரிதா, மே 6-ம் தேதி கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

காவல்துறையினரை மிரட்டி பணம் பறிக்கவும், சில வழக்கு விவகாரங்களில் அவர்கள் மீது பழிவாங்கவும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரே இத்திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

இதற்காகத் தனது கை, கால்களைத் தானே கட்டிக்கொண்டு, உடல் மீது பெட்ரோலையும் ஊற்றிக்கொண்டு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இருப்பினும், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சரிதா தனது நண்பரின் பைக்கில் செல்வதும், ரயில் நிலையத்தில் உலா வருவதும் தெரியவந்தது.

“>

 

மின்னணு ஆதாரங்கள் மூலம் அவர் சிக்கியதைத் தொடர்ந்து, சரிதா சிங், அவரது கணவர், சகோதரிகள் மற்றும் கூட்டாளிகள் உட்பட மொத்தம் 6 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

ஒரு யூடியூபர் காவல்துறையைச் சிக்க வைக்கத் திட்டமிட்டுத் தானே கடத்தல் நாடகத்தை நடத்திய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.