இன்றைய காலக்கட்டத்தில் பல திருமணங்கள் வரதட்சணை என்னும் சமூகத் தீமையால் ஆடம்பரமாக மாறி வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற ஒரு நிக்காஹ் தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் திருமணத்தில் ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ கார் மற்றும் ₹1,01,11,000 ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு பெரிய சாதனையாகக் கருதி, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அனைவர் முன்னிலையிலும் சத்தமாக அறிவிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இஸ்லாமிய முறைப்படி திருமணம் என்பது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி வருகின்றனர்.

“வரதட்சணை ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் சரி, ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, அது தவறுதான்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

கௌரவத்திற்காக இப்படி கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பது முறையற்றது என்றும், இந்தப் பணத்தை குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட்டிருக்கலாம் என்றும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஆடம்பரத்திற்காக நடத்தப்படும் இத்தகைய திருமணங்கள் சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.