மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் காவல் ஆய்வாளர் காட்டிய கனிவான நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரோல் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆதரவற்ற ஒரு பெண் இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் கோவிந்த் பகோலி, உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்தப் பெண்ணுக்கு உணவு வாங்கிக் கொடுத்ததுடன், தானும் அவர் அருகில் தரையில் அமர்ந்து, அவரது தட்டில் இருந்தே உணவை உண்ணத் தொடங்கினார்.

சாப்பிடும்போது அந்தப் பெண் திடீரென ஆத்திரமடைந்து ஆய்வாளரை அடிக்கக் கை ஓங்கினார். ஆனால், அதற்காகக் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே, “உன் தம்பியை அடிப்பாயா?” என்று ஆய்வாளர் அன்போடு கேட்டார்.

“>

 

இதைக் கேட்டு அமைதியான அந்தப் பெண், மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். சட்டத்தை நிலைநாட்டும் காவல் துறையினர், மனிதாபிமானத்துடன் ஒரு சகோதரனாகச் செயல்பட்ட இந்த நெகிழ்ச்சியான செயல் தற்போது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தற்போது அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.