தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேலூர் பரப்புரையில் சொன்ன ‘ஜல்லிக்கட்டு காளை’ குட்டி கதை இப்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த கதையில், ஒரு சிறுவன் புல்லைக் காட்டி முரட்டுக் காளையை அடக்கியதாக விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ள பிக்பாஸ் ஜூலி, விஜய்யை கடுமையாகச் சாடியுள்ளார். “வழக்கம் போல உங்கள் பேச்சில் இந்த முறையும் ஒன்றுமில்லை” எனத் தொடங்கிய ஜூலி, “புல்லைக் காட்டினால் காளை அடங்கிவிடும் என நீங்கள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவீர்கள், ஆனால் உங்கள் பேச்சை நம்பி தவெக-வில் இருக்கும் மைனர் பசங்க யாராவது புல்லைக் கொண்டு போய் காளை முன்னாடி நின்றால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ரொம்ப கஷ்டப்பட்டுப் போராடி ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுத்துருக்கோம், மறுபடியும் எங்களை வீதிக்கு வர வைக்காதீங்க.. உன் இஷ்டத்துக்கு எதையாவது பேசிட்டுப் போகாதீங்க அண்ணா” என விஜய்யைப் பார்த்து ஜூலி பேசியிருப்பது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, இப்போது அதே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விஜய்க்கு எதிராகத் திரும்பியிருப்பது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.