இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சூர்யகுமார் யாதவ் விளையாட்டுத்தனமாக கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற பிறகு, அணி வீரர்கள் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த நகைச்சுவையான சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுத் தந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அவரிடம் சென்று, “உன்னிடமிருந்து எனக்கு கொஞ்சம் உத்வேகம் கிடைத்தது” என்று கிண்டலாகக் கூறியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.

“>கலாய்ப்பதிலும் சூர்யகுமார் தான் கிங்

இந்த வீடியோவில், சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான பாணியில் அர்ஷ்தீப் சிங்குடன் உரையாடுவதைக் காண முடிகிறது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தாலும், அர்ஷ்தீப் சிங்கின் 4 விக்கெட் வீழ்த்திய சாதனையை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு ஜாலியாகப் பேசினார்.

மேலும் இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே எவ்வளவு நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. கடினமான சூழலிலும் இந்திய வீரர்கள் தங்களுக்குள் இருக்கும் நட்புறவைப் பேணுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.