இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உடலில் மிகவும் சுத்தமான மற்றும் அசுத்தமான உறுப்புகள் பற்றி விளக்குகிறது. உடலில் மிகவும் சுத்தமான உறுப்பு கண்கள் என்று கூறப்படுகிறது. கண்களில் தொடர்ந்து கண்ணீர் என்னும் திரவம் சுரந்து, லைசோசைம்ஸ் போன்ற நொதிகள் மூலம் பாக்டீரியாக்களை எதிர்த்து, நுண்ணுயிரிகளை அழித்து, கண்களை சுத்தமாக வைத்திருக்கிறது. இந்த கண்ணீர், தூசி மற்றும் அழுக்குகளை வெளியேற்றி, கண்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இதனால், கண்கள் உடலின் மிகச் சுத்தமான உறுப்பாக கருதப்படுகிறது.

அதேசமயம், உடலில் மிகவும் அசுத்தமான உறுப்புகளாக தொப்புளும் வாயும் குறிப்பிடப்படுகின்றன. தொப்புள் ஒரு குழி போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், வியர்வை, இறந்த சரும செல்கள் போன்றவை தேங்கி, 2000-க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், வாய் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால், உணவுத் துகள்கள் பற்களிடையே சிக்கி, பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு உகந்த இடமாக உள்ளது. இதனால், காலையில் எழுந்தவுடன் வாய் துர்நாற்றம் வீசுவது பொதுவானது. இந்த வீடியோ, உடலின் சுத்தமான மற்றும் அசுத்தமான உறுப்புகள் பற்றிய தகவல்களை எளிமையாக விளக்கி, சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.