நாசிக் நகரில் திருமணமான பெண் ரூபாலி என்பவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு, தற்போது அதிர்ச்சியளிக்கும் புதிய திருப்பத்தைச் சந்தித்து ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. திருமணத்திற்குப் மீறிய கள்ளத்தொடர்பின் கொடூர முடிவாக உருவெடுத்துள்ள இந்தச் சம்பவத்தில், ரூபாலியின் மரணத்திற்குக் காரணமான உண்மைகளை போலிசார் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
ஆரம்பத்தில் சாதாரண மர்ம மரணமாகக் கருதப்பட்ட இந்த விவகாரம், காதலனே அவரை ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகி மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாலி மற்றும் அவரது காதலன் இருவரும் ரகசியமாகச் சந்திப்பதற்காகச் சென்ற சொகுசு ரிசார்ட்டில் தான் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக, காதலன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று ரூபாலியைக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உயிரைப் பறித்துள்ளான்.
அதன் பின்னர் ஒன்றும் அறியாதது போலச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று நாடகமாட முயன்றபோதிலும், போலிசாரின் தீவிர விசாரணை மற்றும் தடய அறிவியல் சான்றுகளின் மூலம் அவனது சாயம் வெளுத்துப்போய் இறுதியாகப் போலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளான்.
இந்நிலையில் தடைமீறிய உறவுகளும், தற்காலிக ஈர்ப்புகளும் எத்தகைய பயங்கரமான விளைவுகளையும் உயிர்ப்பலியையும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. குடும்பத்தையும் சமூகத்தையும் மறந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, அது இறுதியில் ஆபத்தான முடிவையே தரும் என்பதை இந்த நாசிக் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், குற்றவாளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
