இந்தியாவில் மக்கள் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்கின்றனர். ஒரு நபர் தன்னுடைய ஆன்லைன் பரிவர்த்தனை செயலியில் பணத்தை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் யு பி ஐ ஐடி அவசியமாகும். இந்த நிலையில் நேஷ்னல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தாமல் உள்ள யுபிஐ ஐடி அனைத்தும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி முதல் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். எனவே குறிப்பிட்ட யுபிஐ ஐடி மூலமாக கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயல்களில் ஆன்லைன் பரிவர்த்தனையை செய்ய முடியாது. இதனை தவிர்க்க பயன்படுத்தாமல் உள்ள யுபிஐ ஐடிகள் மூலமாக மக்கள் பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனவும் யு பி ஐ மூலமாக நடைபெறும் மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.