இந்தியாவில் தற்போது மக்களவையில் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற வரும் நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி போலி சிம் கார்டு வாங்கும் நபர்கள் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அனுபவிக்க வேண்டும். அதேசமயம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நுகர்வோர்கள் சிம்கார்டுகளை வாங்குவதற்கு முன்பு பயோமெட்ரி கடையாளத்தை கட்டாயமாக வேண்டும்.

நாட்டில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைதொடர்பு சேவை அல்லது நெட்வொர்க்குகளை அரசாங்கம் நிர்வகிக்க முடியும். 138 ஆண்டுகால பழமை வாய்ந்த தொலைத்தொடர்பு துறை மசோதாவுக்கு பதிலாக இந்த புதிய மசோதா மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட உரிமங்களுக்கு பதிலாக இப்போது ஒரு எளிய அங்கீகாரம் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.