சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் 15-ம் தேதி நடைபெறவிருந்த ‘தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு’ மாநாட்டுக்குத் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு இந்து மக்கள் கட்சியினர் மட்டுமன்றி, அவர்களது கூட்டணி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டபடி மாநாட்டை நடத்த அனுமதி கோரி வந்த நிலையில், கடைசி நேரத்தில் கிடைத்த இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

​இந்தத் தடை குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘X’ தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “இந்து மக்கள் கட்சி சார்பில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு அரசு தடை விதித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் கண்டனத்துக்குரியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த மாநாட்டை நடத்துவதற்குத் தமிழக அரசு உடனடியாக உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.