Whatsapp   தன்னுடைய பயனர்களுக்கு கடந்த சில வாரத்திற்கு முன்பாக சேனல் என்ற புதிய அம்சத்தை வழங்கி இருக்கிறது. இதன் மூலமாக தங்களை பின்தொடரும் பாலோயர்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. இதன் மூலமாக  தங்களுடைய பாலோவர்ஸ் உடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. ஐபோன் பயனாளர்களுக்கு  கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் மட்டுமே கிடைத்து வந்தது.

தற்போது  வாட்ஸ் அப்  தனது புதிய அப்டேட்டின் வாயிலாக ஐபோன் பயனர்களுக்கும் சேனலை உருவாக்கும் வம்சத்தை வழங்கியுள்ளது இதற்கு சமீபத்திய வாட்ஸ் அப்பில் பதிப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய செல்போனில் சேனல் உருவாக்கும் அம்சம் இருக்கிறதா என்று சரி பார்ப்பதற்கு அப்டேட் என்பதை கிளிக் செய்து அதில் உள்ள பிளஸ் என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது புதிய சேனல் உருவாகும்.