மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் கூகுளில் பேங்க் ஸ்டேட்மென்ட் தேடியுள்ளார். அவர் தனது வங்கி விவரங்களை போலி இணையதளத்தில் உள்ளிட்டுள்ளார். அறிக்கை வராததால் இணையதளத்தில் உள்ள ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்தார். அதில் பேசிய மர்ம ஆசாமி, செயலி ஒன்றை போனில் இன்ஸ்டால் செய்ய கூறியுள்ளார்.

அப்பெண் அந்த செயலியை நிறுவி தனது வங்கி விவரங்களை உள்ளிட்டார். அதன் பிறகு ரூ.11 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது போனுக்கு மெசேஜ் வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.