இந்தியாவில் தற்போது சிலிண்டர் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. மக்கள் சிலிண்டரை போன் கால் மூலமாக, ஆன்லைன், மொபைல் ஆப் மற்றும் whatsapp மூலமாக புக் செய்யலாம். அதாவது Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலமாகவும், HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலமாகவும், முன்பதிவு செய்யலாம். Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால், 1800224344 என்ற எண்ணிற்கு “Hi” என மெசேஜ் அனுப்பி  முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே உங்களுடைய மொபைல் எண் சரியாக இருக்க வேண்டும்.

அதேசமயம் பேடிஎம், போன் பே மற்றும் கூகுள் பே மூலமாகவும் சிலிண்டரை நீங்கள் முன்பதிவு செய்யலாம். கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு சலுகைகளை சரி பார்த்து அந்தந்த இணையதளத்தின் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். மேலும் சிலிண்டர் பெயரை மாற்றுவதற்கு ஆணாக இருந்தால் அவரிடம் அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் தேவைப்படும். ஆனால் திருமணமான பெண்ணாக இருந்தால் அவருடைய மகளிடம் அல்லது அவரது கணவரிடம் என இரண்டு பேரிடமிருந்தும் உங்கள் பெயருக்கு மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்றிதழை தனித்தனியாக பெறுவது அவசியம்