இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆதார் கார்டில் விவரங்களை புதுப்பிக்க டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்யலாம் என அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இலவசமாக ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு 2024 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலகெடுவுக்கு பிறகு கட்டணத்தை செலுத்தி ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். ஆதாரில் முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல் மற்றும் பிறந்த தேதிகளில் உள்ள மாற்றம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய முடியும்.