இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க மார்ச் மாதம் வரை அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆபரேட்டர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஆதார் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டால் ஆபரேட்டர் பணி நீக்கம் செய்யப்படுவார். இது தொடர்பான புகார்களுக்கு 1947 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.