இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி தற்போது காஷ்மீர் மாநில அரசு 2023 ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி வழக்கமான ஊதிய விகிதத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அவள விடைப்படி வழங்குவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

இதன் மூலமாக 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அகல விலைப்படி உயர்கின்றது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான நிலுவைத் தொகை டிசம்பர் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடிப்படை சம்பளம் உயர உள்ளதால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.