மும்பை மின்சார ரயில்களில் தினமும் பயணிப்பவர்களின் வலிகளையும், அங்கு அரங்கேறும் மோதல்களையும் வெளிப்படுத்தும் விதமாக கல்யாண் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இது உங்கள் அப்பன் வீட்டு ரயிலா? என்ற தலைப்பில் பரவி வரும் இந்த வீடியோவில், நெரிசல் மிகுந்த பெண்கள் பெட்டியில் பயணிக்கும் போது ஏற்படும் கடும் சிரமங்கள் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சக பயணிகளுடன் அந்தப் பெண் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்வதையும், “உங்கள் அலுவலக விரக்தியை இங்கே காட்டாதீர்கள்” என்று சாடுவதையும் காண முடிகிறது. மும்பை மின்சார ரயில்களில் பயணிப்பது ஒரு போர்க்களத்திற்குச் செல்வது போன்றது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Chauhan (@curlhonaaho)

“>

இது சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் வேண்டுமென்றே மற்ற பயணிகளை வம்புக்கு இழுக்கும் கோபமூட்டுதல் பாணியைக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் “வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களை யாரும் மதிக்காததால் தான் இங்கே கத்துகிறீர்களா?” என அவர் கேட்கும் வசீகரமான அதேசமயம் சர்ச்சைக்குரிய வசனங்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. மும்பை ரயில் பயணிகளின் அன்றாட மன உளைச்சலையும், இருக்கைக்காகவும் இடத்திற்காகவும் அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் இந்தப் பதிவு தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது.