சமூக வலைதளங்களில் வெளியாகும் விலங்குகளின் குறும்புகள் நிறைந்த வீடியோக்கள் அவ்வப்போது மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது ஒரு மூதாட்டி குரங்குடன் செய்த குறும்பு அவருக்கே வினையாக முடிந்த வீடியோ வைரலாகி வருகிறது. தரைப்பகுதியில் மூன்று குரங்குகள் உணவு தேடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சுவருக்கு பின்னால் மறைந்திருந்த மூதாட்டி ஒருவர், மெதுவாகச் சென்று ஒரு குரங்கின் வாலைப் பிடித்து இழுக்க முயன்றார்.
Notty dadi😭 pic.twitter.com/ZiabV0R0bI
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 8, 2026
சற்றும் எதிர்பாராத நிலையில் அந்த குரங்கு ஆக்ரோஷமாக எகிறி மூதாட்டியைத் தாக்க முற்பட்டதால், அவர் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பியோடினார். இந்த வேடிக்கையான காட்சியை எக்ஸ் சமூக வலைதளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ரசித்துப் பகிர்ந்து வருகின்றனர். முதுமையிலும் குறையாத அந்த மூதாட்டியின் குறும்புத்தனத்தைப் பார்த்து இணையவாசிகள் அவரைத் துணிச்சலானவர் என்று வியந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
