தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க வேண்டும். அதோடு பாலிசிதாரரின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் காப்பீடு கிடைக்கும்.

இது தவிர அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 லட்ச ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பாக பாலிசிதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு  பணம் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறையில் முதலீட்டு தொகையை செலுத்தலாம்.